திருமணத்திற்கு சென்று ஜலசமாதியான 71 உயிர்கள் - உயர்ந்து கொண்டே இருக்கும் பலி எண்ணிக்கை

Update: 2024-12-31 02:37 GMT

எத்தியோப்பியாவில், ஆற்றில் லாரி கவிழ்ந்த விபத்தில் 71 பேர் உயிரிழந்தனர். திருமண கோஷ்டியினரை ஏற்றிச் சென்ற லாரி, சிடாமா மாநிலம் வழியாக சென்ற போது, கட்டுப்பாட்டை இழந்து பாலத்தில் இருந்து தவறி ஆற்றில் விழுந்துள்ளது. தெற்கு எத்தியோப்பியாவில் நிகழ்ந்த இந்த சம்பவத்தில், 68 ஆண்கள் மற்றும் 3 பெண்கள் உயிரிழந்தனர். மேலும் 5 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதால், பலி எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என்று அஞ்சப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்