கொல்லப்பட்ட பாலஸ்தீனியர்கள் எண்ணிக்கை..? உலகை அதிர வைத்த இஸ்ரேலின் கொடூரம்
காசாவில் இஸ்ரேல் படைகளால் கொல்லப்பட்ட பாலஸ்தீனியர்கள் எண்ணிக்கை 44 ஆயிரத்து 612ஆக அதிகரித்துள்ளது... போர் துவங்கியது முதல் இதுவரை 1 லட்சத்து 5 ஆயிரத்து 834 பாலஸ்தீனியர்கள் படுகாயம் அடைந்தனர்... நுசேரத் அகதிகள் முகாமில் தாக்குதல் நடத்திய இஸ்ரேலால் 21 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.. மேலும் பலர் படுகாயமடைந்துள்ளனர்... அதேபோல், கமல் அத்வான் மருத்துவமனையில் நடத்தப்பட்ட இஸ்ரேலிய தாக்குதலில் 30க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். இந்நிலையில், ஹமாஸ் கமாண்டர் நிதல் அல் நஜரை வான்வழித் தாக்குதல் நடத்திக் கொன்றதாக இஸ்ரேல் பாதுகாப்புப் படை அறிக்கை வெளியிட்டுள்ளது...