குவைத்திற்கு 3 நாள் பயணமாக சென்றுள்ள பிரதமர் மோடி இந்திய தொழிலாளர்கள் உடன் கலந்துரையாடல் நடத்தினார்.. அப்போது “வளர்ச்சி என்றால் நல்ல சாலைகள், நல்ல விமான நிலையங்கள், நல்ல ரயில் நிலையங்கள் மட்டும் இல்லை“ என்றும், ஏழை எளியவர்களின் வீடுகளில் கழிப்பறை வேண்டும்... 11 கோடி கழிப்பறைகள் கட்ட வேண்டும்...“ என்ற எண்ணம் உள்ளதாகவும் தெரிவித்தார்... இதுவரை 4 கோடி வீடுகள் கட்டி கொடுக்கப்பட்டுள்ள நிலையில் கண்ணியம் மற்றும் மரியாதையை ஏழைகள் பெற வேண்டும் என வலியுறுத்தினார். மேலும் நம் விவசாயிகள், தொழிலாளர்கள் வேலை செய்யும் நேரத்தை விட தான் 1 மணி நேரம் கூடுதலாக உழைக்க வேண்டும் என்று நினைப்பதாகவும், தொழிலாளர்கள் அவர்கள் குடும்பத்திற்காக உழைப்பதைப்போல தானும் தன் குடும்பத்தில் உள்ள 140 கோடி பேருக்காக இன்னும் கொஞ்சம் உழைக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.