மொத்தமாக நம்பிக்கையை கைவிட்ட இஸ்ரேலியர்கள் - என்ன செய்ய போகிறார் நெதன்யாகு?

Update: 2024-12-22 05:54 GMT

இஸ்ரேலின் டெல் அவிவ் நகரில் காசாவில் பிடித்து வைக்கப்பட்டுள்ள பிணைக்கைதிகளை விடுவிக்கக் கோரி பொதுமக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்... கிட்டத்தட்ட 100 பிணைக்கைதிகள் ஹமாஸ் பிடியில் உள்ளதாக இஸ்ரேல் கூறும் நிலையில் அவர்களில் எத்தனை பேர் உயிருடன் இருக்கிறார்கள் என்பது தெரியவில்லை. பிணைக்கைதிகளை விடுவிப்பது தொடர்பான பேச்சுவார்த்தையில் எந்த முன்னேற்றமும் இல்லை என்றும் தங்களுக்கு நம்பிக்கை இல்லை எனவும் விரக்தி தெரிவித்த பிணைக்கைதிகளின் உறவினர்கள், இந்த அரசியல் விளையாட்டுகளுக்கு அங்கே சிக்கியுள்ளவர்களுக்கு நேரமில்லை என்றும், நிச்சயமாக அவர்களால் இந்த குளிர்காலத்தை காசா போன்ற ஒரு பலவீனமான இடத்தில் சமாளிக்கவே முடியாது எனவும் அவர்கள் கவலை தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்