அடுத்த 5 ஆண்டுகளில்.. ``உலகிலேயே இந்தியா 3-வது இடம்’’ - வெளியான அறிக்கை
அடுத்த 5 ஆண்டுகளில் உலக வர்த்தக வளர்ச்சில, 6 சதவீத பங்களிப்ப வழங்கி இந்தியா மூன்றாவது இடத்த பிடிக்கும்னு அறிக்கை வெளியாகிருக்கு. DHL மற்றும் New York University Stern School of Business சார்பில அடுத்த 5 ஆண்டுகள்ல உலக நாடுகள் வர்த்தகத்துல எவ்ளோ பங்களிப்பு கொடுப்பாங்கன்னு ஆய்வு நடத்தப்பட்டுச்சு. அதுல, இந்தியாவோட வளர்ச்சி அதிகரிச்சுருக்கதா தெரிய வந்தது. இதனால், அடுத்த 5 ஆண்டுகள்ல, உலக வர்த்தக வளர்ச்சில 6 சதவீத பங்களிப்ப இந்தியா வழங்கும்னும், சீனா 12 சதவீத பங்களிப்பும், அமெரிக்கா 10 சதவீத பங்களிப்பும் வழங்கும்னும் தெரிய வந்துருக்கு.