காசாவில் பிடித்து வைக்கப்பட்டுள்ள பிணைக் கைதிகளை உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்கக் கோரி இஸ்ரேலின் டெல் அவிவ் நகரில் மக்கள் போராட்டம் நடத்தினர்... இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, எஞ்சியுள்ள 101 பிணைக் கைதிகளை கண்டுபிடிக்கும் முயற்சியை இஸ்ரேல் கைவிடவில்லை என்றும், திரும்பும் ஒவ்வொருவருக்கும் 42 கோடி ரூபாய் பரிசு வழங்குவதாகவும் தெரிவித்தார்... போரை முடிவுக்குக் கொண்டுவரும் ஒப்பந்தத்தை எதிர்பார்த்துள்ள ஹமாஸ், காசாவில் சிறைபிடிக்கப்பட்ட இஸ்ரேலிய மற்றும் வெளிநாட்டு பிணைக் கைதிகளை விடுவிக்க விருப்பம் தெரிவித்ததுடன், இஸ்ரேலால் சிறையில் அடைக்கப்பட்ட பாலஸ்தீனியர்களையும் விடுவிக்க வேண்டும் என வலியுறுத்தி வருகிறது... அதே நேரம் ஹமாஸ் ஒழிக்கப்பட்டால் மட்டுமே போரை முடிவுக்குக் கொண்டுவர முடியும் என்று இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு சபதம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.