காசாவில் போர் சூழலில், கிறிஸ்தவர்கள் கிறிஸ்துமஸ் சிறப்பு வழிபாட்டில் பங்கேற்று, இயேசுவின் பிறப்பு விழாவை கொண்டாடினர். காசாவில், சுமார் ஆயிரத்து 200 பாலஸ்தீனிய கிறிஸ்தவர்கள் வசித்து வருகின்றனர். இஸ்ரேல் - ஹமாஸ் இடையிலான போரில், அதில் 3 சதவீத கிறிஸ்தவர்கள் கொல்லப்பட்டனர். அங்கிருந்த 3 தேவாலயங்களும் தகர்க்கப்பட்டன. இந்நிலையில், இஸ்ரேல் - காசா இடையே போர் நடைபெற்று வரும் அசாதாரண சூழ்நிலையில், காசாவில் உள்ள திருக்குடும்ப தேவாலயத்தில், பாலஸ்தீனிய கிறிஸ்தவர்கள், இயேசு கிறிஸ்துவின் பிறப்பு விழாவானை கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடினர். போரின் காரணமாக தேவலாயங்கள், முகாம்களாக இருப்பதாக தெரிவித்த கிறிஸ்தவர்கள், போர் நின்று, அமைதி திரும்ப வேண்டும் என பிரார்த்தித்ததாக தெரிவித்தனர்.