இந்தியாவில் கால் பதித்த பிரான்ஸ்.. முழங்கிய வாத்தியங்கள் - சிலிர்க்க வைக்கும் காட்சிகள்
பிரான்ஸ் நாட்டின் மிகப்பெரிய விமானம் தாங்கி போர் கப்பலான சார்லஸ் டி கல்லே கோவா துறைமுகம்
வந்தடைந்தது. அணு சக்தியால் இயங்கும் இந்த போர் கப்பலில் ரபேல் போர் விமானங்கள் நிறுத்தப்பட்டுள்ளன. அவை இந்திய கடற்படையில் உள்ள ரபேல் போர் விமானங்களுடன் இணைந்து கூட்டு பயிற்சியில் ஈடுபட உள்ளன. கோவா துறைமுகம் வந்துள்ள பிரான்ஸ் போர் கப்பலுக்கு இந்திய கடற்படை சார்பில் பேண்ட் வாத்தியங்கள் முழங்க சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.