ஷோகன் சிறந்த ட்ராமா சீரிஸுக்கான கோல்டன் குளோப் விருதை வென்றது... சிறந்த லிமிடெட் சீரிஸ், ஆந்தாலஜி சீரிஸுக்கான விருதை Baby Reindeerம், சிறந்த இசை, நகைச்சுவை சீரிஸுக்கான விருதை ஹேக்ஸும் வென்றன. சிறந்த தொலைக்காட்சி நடிகருக்கான விருது ஷோகனில் நடித்த ஹிரோயுகி சனடாவுக்கும் நடிகைக்கான விருது அதே தொடரில் நடித்த அன்னா சவாய்க்கும் வழங்கப்பட்டது. சிறந்த தொலைக்காட்சி துணை நடிகைக்கான விருதை பேபி ரெய்ண்டீரில் நடித்த ஜெசிகா கன்னிங்கும், துணை நடிகருக்கான விருது ஷோகனுக்காக தடானோபு அசானோவும் வென்று அசத்தினர். இசை, நகைச்சுவை பிரிவில் சிறந்த தொலைக்காட்சி நடிகருக்கான விருது The Bear சீரிஸுக்காக ஜெரெமி ஆலன் வைட்டிற்கும், நடிகைக்கான விருது ஹேக்ஸ் சீரிஸுக்காக ஜீன் ஸ்மார்ட்டுக்கும், லிமிட்டெட் சீரிஸ், ஆந்தாலஜி சீரிஸ், பிரிவில் சிறந்த நடிகருக்கான விருது தி பென்குவினுக்காக கோலின் ஃபாரெல்லுக்கும், சிறந்த நடிகைக்கான விருது நைட் கன்ட்ரிக்காக ஜோடி ஃபோஸ்டருக்கும் வழங்கி கௌரவிக்கப்பட்டது.