ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் விண்ணில் செலுத்திய ஸ்டார்ஷிப் விண்கலம் வெடித்து, விழும் வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன. டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம், 10 மாதிரி செயற்கைக் கோள்களுடன் ஸ்டார் ஷிப் விண்கலத்தை, கடந்த வியாழன் அன்று விண்ணில் செலுத்தியது. எனினும், புறப்பட்ட சில நிமிடங்களிலேயே விண்கலம், கட்டுப்பாட்டு மையத்துடனான தொடர்பை இழந்ததுடன், வெடித்துச் சிதறியது. சிதறிய விண்கலம் ஒளிக் கீற்றுக்களாக விழும் வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த வீடியோவை எக்ஸ் தள பக்கத்தில் பகிர்ந்துள்ள எலான் மஸ்க், வெற்றி நிச்சயமற்றது, ஆனால் பொழுதுபோக்கு உறுதி என பதிவிட்டுள்ளார்.