ரத்தக்களறியான பூங்கா - பரிதாபமாக பலியான 3 இளைஞர்கள்..

Update: 2025-03-23 06:05 GMT

அமெரிக்காவின் நியூமெக்சிகோ New Mexico மாகாணத்தில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 3 பேர் உயிரிழந்தனர். லாஸ் குரூசஸ் Las Cruces என்ற இடத்தில் உள்ள பூங்கா ஒன்றில், இரு குழுக்கள் இடையே வாக்குவாதம் முற்றி துப்பாக்கிச்சூடு நடந்துள்ளது. இதில் 19 வயதை சேர்ந்த இருவரும், 16 வயது சிறுவனும் உயிரிழந்தனர். காயமடைந்த 15 பேரை போலீசார் மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்