நடைபாதையில் நடந்து சென்ற 35 பேர் பலி.. பின்னணியில் இருந்த கொடூர கதை

Update: 2024-11-13 03:04 GMT

சீனாவின், குவாங்டாங் மாகாணத்தின் ஷூஹாய் நகரில் திங்கட்கிழமை இரவு 7.48 மணியளவில் வயதான ஒருவர் கார் ஓட்டிச் சென்றுள்ளார். நடைபாதையில் ஏராளமான மக்கள் சென்றுகொண்டிருந்தபோது, அவர்கள் மீது காரை ஏற்றியுள்ளார். இதில் பலர் தூக்கி வீசப்பட்டனர். பலர் அடிபட்டு சிதறிக்கிடந்த நிலையில், அங்கிருந்தவர்கள், தலைதெறிக்க ஓட்டம் பிடித்தனர். இந்த விபத்தில், 35 பேர் உயிரிழந்துள்ளனர். 43 பேர் படுகாயமடைந்துள்ளனர். விபத்தை ஏற்படுத்தியவர் 62 வயதான ஃபேன் என்று தெரிய வந்துள்ளது. அவருக்கு விவாகரத்து ஆனதால், விரக்தியில் விபத்தை ஏற்படுத்தியதாகவும், கத்தியால் தன்னைத்தானே காயப்படுத்திக் கொண்டுள்ளதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது. உயிரிழந்தவர்களுக்காக, விபத்து நடந்த இடத்தில் மலர்களை வைத்து உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் அஞ்சலி

Tags:    

மேலும் செய்திகள்