200 முறை டார்ச்சர் செய்து 12 வயது மாணவனை அப்பாவாக்கிய டீச்சர் - அலற வைத்த DNA ரிப்போர்ட்

Update: 2024-12-23 09:14 GMT

அமெரிக்காவின் டென்னிசி மாகாணத்தில் 12 வயது சிறுவனை பாலியல் வன்கொடுமை செய்து தாயான ஆசிரியைக்கு 25 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

21 பேர் குற்றம் சாட்டிய நிலையில், 5 குற்றச்சாட்டுகளை ஆசிரியர் அலிசா மெக்கோமன் ஒப்புக் கொண்ட நிலையில் அவருக்கு சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது. 4ம் வகுப்பு ஆசிரியையாக இருந்த அலிசாவின் ஆசிரியர் உரிமமும் ஏற்கனவே ரத்து செய்யப்பட்டுள்ளது. தனது வகுப்பு மாணவர்களுடன் வீடியோ கேம் விளையாடுவது, சமூக வலைதளங்களில் பின் தொடர்வது, மாணவர்களின் தாய்மார்களுடன் நெருங்கிப் பழகுவது என்று இருந்து வந்த அலிசா, ஒரு மாணவருடன் தீவிரமாக பழகி, அவரை 200க்கும் மேற்பட்ட முறை தொடர்பு கொண்டதுடன், ஸ்னாப் சாட் மூலம் புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார். ஒரு கட்டத்தில் உறவை முறித்துக் கொண்டால் உயிரை மாய்த்துக் கொள்வேன் என்றெல்லாம் 12 வயது மாணவரை மிரட்டியுள்ளார் அலிசா... மேலும் பல மாணவர்களுடன் இவர் சம்பந்தப்பட்டுள்ள நிலையில் இதுகுறித்து சிறுவனின் தாய் புகாரளித்திருந்தார்... பள்ளியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட அலிசா கைது செய்யப்பட்டார். பிணையில் விடுவிக்கப்பட்ட போதும் பாதிக்கப்பட்ட மாணவர்கள் ஒருவரைத் தொடர்பு கொண்டதால் மீண்டும் கைது செய்யப்பட்டார் அலிசா... இந்த சூழலில் தான், ஏற்கனவே 2 குழந்தக்களுக்குத் தாயான

அலிசா 12 வயது சிறுவனின் குழந்தைக்குத் தாயாகி இருப்பதாக அதிர்ச்சியை ஏற்படுத்தினார்... டிஎன்ஏ பரிசோதனையிலும் உறுதியான நிலையில், அந்தக் குழந்தையை அலிசா தொடர்பு கொள்ளக் கூடாது என்றும், தண்டனையை நிச்சயம் அனுபவிக்க வேண்டும் என்றும் கூறி 25 ஆண்டுகள் சிறைதண்டனை விதித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்