கிரிப்டோ நாணயங்களுக்கு சாதகமான கொள்கைகளை அமெரிக்க அதிபராக பதவி ஏற்க உள்ள டிரம்ப் அமல்படுத்துவார் என்ற எதிர்பார்ப்பில், பிட்காயின் விலை கடந்த ஒரு மாதத்தில் 45 சதவீதம் அதிகரித்துள்ளது. நவம்பர் 5ஆம் தேதி அன்று ஒரு பிட்காயின் விலை 57 லட்சத்து 46 ஆயிரம் ரூபாயாக இருந்த நிலையில், தற்போது 86 லட்சத்து 70 ஆயிரம் ரூபாயாக
உச்சமடைந்துள்ளது. அமெரிக்காவை உலகின் கிரிப்டோ நாணய தலைநகராக மாற்றப் போவதாக டிரம்ப் அறிவித்திருந்தார். அமெரிக்க அரசு கிரிப்டோ நாணயங்களை வாங்கி சேமிக்கும் என்றும் கூறியிருந்தால், பிட்காயின்
விலை மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.