- இந்திய தேர்தல் ஆணையர் பணி நியமன திருத்த மசோதா...மாநிலங்களவையில் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றம்... எதிர்க்கட்சி எம்.பி.க்கள் வெளிநடப்பு...
- மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கஆளுநருக்கு உத்தரவிட கோரிய வழக்கில் திருத்தம் கோரி, உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மனு...10 மசோதாக்களையும் குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைத்த ஆளுநரின் நடவடிக்கையை சட்டவிரோதம் என அறிவிக்க வேண்டும் என்று, கோரிக்கை...
- சென்னையில் புயல் வெள்ள பாதிப்பை ஆய்வு செய்த மத்தியக் குழுவினர்...பட்டாளம், புளியந்தோப்பு, காரப்பாக்கம், வேளச்சேரி உள்ளிட்ட இடங்களில் ஆய்வு...
- 2015-ஐ காட்டிலும் தற்போது மீட்பு பணி சிறப்பாக இருந்ததாக மத்தியக் குழு பாராட்டு...மத்திய அரசிடம் கூடுதல் நிதி கேட்டு வலியுறுத்துவோம் என்றும், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேட்டி...
- சென்னை எண்ணூரில், ஆற்றில் கச்சா எண்ணெய் கலந்த பகுதியில் மத்திய குழுவினர் ஆய்வு...தமிழக சுற்றுச்சூழல் கூடுதல் தலைமை செயலாளர் சுப்ரியா சாகுவிடம் மீனவர்கள் சரமாரி புகார்...