புத்தாண்டில் புது ரூட் எடுக்கும் அன்புமணி? - தனி ரூட்டில் ராமதாஸ்.. பரபரப்பில் பனையூர், தைலாபுரம்
கட்சி தொண்டர்கள், நிர்வாகிகளை பனையூர் இல்லத்தில் இன்று சந்திக்க அன்புமணி ஆயத்தமாகி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பாமக மாநில இளைஞர் அணி தலைவர் நியமனத்தில் ராமதாஸ் மற்றும் அன்புமணி இடையே பொதுக்குழுவில் கருத்து வேறுபாடு வெளிப்பட்டது. அன்புமணியின் சகோதரி மகன் முகுந்தனை இளைஞர் அணி தலைவராக நியமித்ததை மேடையிலேயே அன்புமணி எதிர்த்தார். இந்த விவகாரத்தில் கட்சிக்குள் கருத்து ஒற்றுமை எட்டப்படாத வேளையில், பனையூர் இல்லத்தில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் உட்பட 9 மாவட்ட செயலாளர்களுடன் அன்புமணி ஆலோசனை நடத்தினார். அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை தொடர்பாக வள்ளுவர் கோட்டத்தில் நடக்கவிருக்கும் ஆர்ப்பாட்டம் குறித்து அவர் முக்கிய ஆலோசனையை நடத்தியதாக தெரிகிறது. அதுபோக புத்தாண்டு தினமான இன்று கட்சி நிர்வாகிகள், தொண்டர்களை பனையூர் அலுவலகத்தில் அன்புமணி ராமதாஸ் சந்திப்பார் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன. அதே நேரத்தில் திண்டிவனம் தைலாபுரம் தோட்டத்தில் கட்சி நிறுவனர் ராமதாசையும் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் சந்தித்து வாழ்த்து பெற இருக்கிறார்கள். இதனால் புத்தாண்டு தினத்தில் தைலாபுரம் மற்றும் பனையூர் பரபரப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறதுWill Anbumani take a new route in the New Year? - Ramadoss on a separate route.. Panaiyur, Tailapuram in a state of excitement