தேனி மாவட்டம் லோயர் கேம்பில், பாளையங்கோட்டை சிறைத்துறை அதிகாரி வீட்டில், லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நிறைவடைந்தது. பாளையங்கோட்டை மத்திய சிறை அதிகாரியான வசந்த கண்ணன் மற்றும் அவரது சம்பந்தப்பட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். லோயர் கேம்பில் உள்ள அவரது வீட்டில், காலை 7 மணிக்கு தொடங்கிய சோதனை, பிற்பகல் 3 மணி வரை நடைபெற்றது. 7 மணி நேரம் நடைபெற்ற சோதனையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் குறித்து தகவல் கூற முடியாது என அதிகாரிகள் தெரிவித்தனர்.