"பரமபத வாசல் திறப்பு.. 500 பேருக்கு டிக்கெட் இலவசம்" - அமைச்சர் சேகர்பாபு
திருவல்லிகேணி பார்த்தசாரதி கோயிலில் வைகுண்ட ஏகாதசி ஏற்பாடுகளை அமைச்சர் சேகர்பாபு ஆய்வு செய்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசியவர், பரமபதவாசல் திறப்பின் போது ஒருவருக்கு 500 ரூபாய் கட்டணம் என 1500 பேருக்கு அனுமதி வழங்கப்படும் என்றார். ஆன்லைன் மூலம் முதலில் விண்ணப்பிக்கும் 500 பேர் இலவச அனுமதிசீட்டு வழங்கப்படும் என்றார். சிறப்பு தரிசனங்கள் முடிந்து 6 மணிக்கு பொது தரிசனம் தொடங்கும் என்றவர், கோயிலில் குடிநீர், கழிப்பறை, மருத்துவம் வசதிகள், மாற்றுத்திறனாளிகள், கர்ப்பிணி பெண்களுக்கும், வயதானவர்களும் சிறப்பு வழியில் தரிசனம் செய்ய ஏற்பாடு செய்திருப்பதாக தெரிவித்தார்.
தமிழகத்தில் முன்னெப்போதும் இல்லாத வகையில் தி.மு.க. ஆட்சியில் தான் ஆயிரத்து 185 கோடி ரூபாய், கோயில்களுக்கு உபயதாரர் நிதியாக வந்துள்ளது என அமைச்சர் சேகர் பாபு தெரிவித்தார்