பக்தவச்சலப் பெருமாள் கோயில் தேரோட்டம்..! விண்ணைப் பிளந்த 'கோவிந்தா' கோஷம்
சென்னை வண்ணாரப்பேட்டையில் 100 ஆண்டுகள் பழமையான பக்தவச்சலப் பெருமாள் கோயில் தேரோட்டத்தில் ஏராளமான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.சஞ்சீவிராயன் தெருவில் அமைந்துள்ள இந்த கோவிலில் பங்குனி மாத பிரம்மோற்சவம் வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது. ஏழாம் நாளான இன்று பெருமாள் அலங்கரிக்கப்பட்டு கருட வாகனத்தில் நடனமாடியபடி ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து ஏராளமானோர் தேரை வடம் பிடித்து இழுத்து சாமி தரிசனம் செய்தனர்