துண்டான காவலாளியின் கை | நொடியில் நடந்த எதிர்பாரா சம்பவம் | பொள்ளாச்சியில் அதிர்ச்சி
பொள்ளாச்சி அருகே ஆழியார் பகுதியில் யானைகள் வருவதை தடுக்க வைத்திருந்த பட்டாசு வெடித்து
காவலாளியின் கை துண்டான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.பொள்ளாச்சி அருகே உள்ள நாகரூத் மலைவாழ் மக்கள் குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த முத்துக்குமார் ஆழியார் அருகே உள்ள தனியார் தோட்டத்தில் காவலாளியாக பணியாற்றி வருகிறார்.இந்நிலையில் தோட்டத்திற்குள் வந்த காட்டு யானைகளை விரட்டுவதற்காக பட்டாசு வெடித்தபோது எதிர்பாராத விதமாக கையில் வைத்திருந்த பட்டாசு வெடித்தில் 5 விரல்களும் துண்டாகி முத்துக்குமார் படுகாயமடைந்தார்.சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.