சென்னையை அதிரவைத்த திக்திக் சம்பவம் - யார் இந்த ஈரானிய கொள்ளையர்கள்?

Update: 2025-03-26 14:41 GMT

சென்னையில் செயின் பறிப்பு சம்பவங்களில் சிக்கிய ஈரானிய கொள்ளையர்கள் யார்? என்ற கேள்வி எழுந்துள்ளது.

ஈரானிய கொள்ளையர்களின் மூதாதையர்கள் 14 மற்றும் 15 ஆம் நூற்றாண்டுகளில் ஈரானில் இருந்து இந்தியாவிற்கு குடிபெயர்ந்ததாக நம்பப்படுகிறது. பாகிஸ்தான் மற்றும் ஈரான் முழுவதும் பரவியிருக்கும் பலுசிஸ்தான் பாலைவனம் இவர்களுடைய பூர்வீகமாக இருக்கிறது. தோற்றத்தில் டிப் டாப்பாக இருக்கும் இவர்களது பிரதான தொழிலே கொள்ளையடிப்பதாக இருக்கிறது. ஈரானிய கொள்ளையர்கள் குறிப்பாக வயதான பெண்களை குறிவைத்தே கொள்ளையடிக்கிறார்கள். சங்கிலி திருடர்களாகவும் வலம் வருகிறார்கள். தங்களை போலீசார் போல் காட்டிக்கொண்டு பெண்களிடம் கைவரிசை காட்டுவதும் இவர்களது வழக்கமாக இருக்கிறது. மகாராஷ்டிரா, கர்நாடகா, ஆந்திரா, மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் பரவலாக இவர்கள் காணப்படுகிறார்கள். ஈரானிய கொள்ளை கும்பல்களால் தென் மாநிலங்களில் சமீப காலமாக செயின் பறிப்பு சம்பங்கள் அதிகரித்து வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்