தென்கொரியாவில் பரவிய காட்டுத்தீயில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 18ஆக உயர்ந்துள்ளது. தென்கொரியாவின் தென்கிழக்கு பகுதியில் வறண்ட வானிலை மற்றும் பலத்த காற்று வீசுவதால் காட்டுத்தீ வேகமாகப் பரவி வருகிறது. மலைகளில் இருந்து தொடர்ந்து புகை வெளியேறி வருகிறது.
காட்டுத்தீ காரணமாக 27 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. சிறைகளில் இருந்த நூற்றுக்கணக்கான கைதிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.