பார் முன் வைத்து போலீசாரை கண்மண் தெரியாமல் தாக்கிய 6 ஆசாமிகள் - ஆட்சியர் அதிரடி உத்தரவு

Update: 2024-12-18 01:56 GMT

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் கடந்த நவம்பர் 10ம் தேதி போலீஸாரை தாக்கிய வழக்கில் கைதான 6 பேரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் தடுப்பு காவலில் வைக்க மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் உத்தரவிட்டுள்ளார் . ராஜபாளையம் பஞ்சு மார்க்கெட் நேரு சிலை அருகே உள்ள தனியார் பார் முன் கடந்த 10-ம் தேதி இரவு இளைஞர்கள் சிலர் பிரச்சினை செய்து கொண்டிருந்த போது, அங்கு சென்று இரு காவலர்கள் அவர்களை கலைக்க முற்பட்டபோது, அந்த இளைஞர்கள் அவர்களிடமிருந்து லத்தியை பறித்து தாக்கிய வீடியோ வெளியாகி அதிர்ச்சி ஏற்படுத்தியிருந்த நிலையில் , சம்பந்தப்பட்ட இளைஞர்கள் ஆறு பேர் மீது ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. தற்போது ஆறு பேரும் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்