இந்திய அரசியலமைப்பு சட்டம் ஏற்கப்பட்டு 75 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி மாநிலங்களவையில் விவாதம் நடைபெற்றது. விவாதத்தில் பங்கேற்று பேசிய பாமக எம்.பி. அன்புமணி ராமதாஸ், இடஒதுக்கீட்டில் ஓபிசி பிரிவினருக்கு மட்டும் பாகுபாடு ஏன்? என கேள்வியை எழுப்பினார். இடஒதுக்கீட்டில் 50 சதவீதம் என்ற உச்சவரம்பை நீக்க வேண்டும் என்றும் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்தவேண்டும் எனவும் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தினார்.