நிரந்தர தீர்வு வரும் வரை போராட்டம் தொடரும் - கடும் கோபத்தில் பொங்கி எழும் மதுரை மக்கள்

Update: 2024-12-18 02:52 GMT

நிரந்தர தீர்வு வரும் வரை போராட்டம் தொடரும் - கடும் கோபத்தில் பொங்கி எழும் மதுரை மக்கள்

டங்ஸ்டன் கனிம சுரங்கத்திற்கு வழங்கப்பட்ட அனுமதியை ரத்து செய்யாத, மத்திய அரசை கண்டித்து அரிட்டாபட்டி மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மத்திய அரசு வழங்கியுள்ள அனுமதியை உடனடியாக ரத்துச் செய்ய வேண்டும், வரலாற்று சின்னங்கள் உள்ள மதுரை மாவட்டத்தை பாதுகாக்கப்பட்ட தமிழ் பண்பாட்டு தொல்லியல் மண்டலமாக அறிவிக்க வேண்டும், முல்லைப் பெரியாறு பாசன பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தி மக்கள் தொடர் போராட்டத்தை தொடங்கி உள்ளனர். தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் மட்டும் போதாது எனவும், தமிழக எம்.பி.க்கள் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து டங்க்ஸ்டன் சுரங்க அனுமதியை நிரந்தரமாக ரத்து செய்யும் வரை எங்கள் போராட்டம் தொடரும் எனவும் கிராம மக்கள் அறிவித்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்