தொடர்ந்து போக்கு காட்டிய சவுக்கு.. ஆபிஸிலேயே வைத்து தூக்கிய போலீஸ்.. தேனியும்.. பரபர பின்னணியும்
தொடர்ந்து போக்கு காட்டிய சவுக்கு.. ஆபிஸிலேயே வைத்து தூக்கிய போலீஸ்.. தேனியும்.. பரபர பின்னணியும்
கஞ்சா வழக்கில் தொடர்ந்து நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருந்த சவுக்கு சங்கர், சென்னையில் மீண்டும் கைது செய்யப்பட்டு தேனிக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
தேனி மாவட்டம் பழனிசெட்டிபட்டியில் சவுக்கு சங்கர் தங்கியிருந்தபோது, அவருடைய கார் மற்றும் அவரது உதவியாளரிடம் இருந்து இரண்டரை கிலோ கஞ்சா போதைப்பொருள் கைப்பற்றப்பட்டது. இது தொடர்பான வழக்கு மதுரை மாவட்ட போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில், சவுக்கு சங்கர் கடந்த ஜூலை மாதம் நிபந்தனை ஜாமினில் விடுவிக்கப்பட்டார். வழக்கு விசாரணையின்போது, சவுக்கு சங்கர் தொடர்ந்து ஆஜராகாதது குறித்து அவருடைய வழக்கறிஞர் மனு அளித்தார். அதனை ஏற்க மறுத்த நீதிபதி செங்கமலச்செல்வன், சவுக்கு சங்கருக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து, சென்னை தி.நகரில் உள்ள அலுவலகத்தில் வைத்து சவுக்கு சங்கரை தேனாம்பேட்டை போலீசார் கைது செய்தனர். பின்னர், தேனி மாவட்டம் பழனி செட்டிப்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தொடர்ந்து தேனி போலீசாரிடம் சவுக்கு சங்கர் ஒப்படைக்கப்பட்டதும், தேனிக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.