ஸ்கூலுக்குள்ளயே வந்து சிறுமியின் முகத்தை கடித்து குதறிய தெருநாய்..தந்தை கண்ணீர் பேட்டி | Dog Bite

Update: 2024-12-18 02:32 GMT

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகேயுள்ள சரஸ்வதி நகரில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளியில் 300-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்நிலையில் அங்கு எல்.கே.ஜி பயிலும் ஜெய்ஸ்வினி, கழிவறை செல்வதற்காக வெளியே சென்ற போது, வளாகத்திற்குள் புகுந்த தெருநாய் குழந்தையின் முகத்தில் கடித்ததாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்த சிறுமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், பள்ளி நிர்வாகம் பாதுகாப்பான முறையில் குழுந்தைகளை கவனிக்கவில்லை என சிறுமியின் பெற்றோர் குற்றம்சாட்டினர்.

Tags:    

மேலும் செய்திகள்