வருவாய்த் துறையினறை பார்த்து கதவை பூட்டிக்கொண்ட நித்யானந்தா சிஷ்யைகள்

Update: 2025-03-20 05:54 GMT

விருதுநகர் மாவட்டம், கோதை நாச்சியார்புரத்தில் உள்ள நித்யானந்தா ஆசிரமத்தில் தங்கியிருக்கும் பெண்களை வருவாய் துறையினர் வெளியேற்ற சென்றபோது, அவர்கள் அறைகளை உள்பக்கமாக தாழிட்டு வாக்குவாதம் செய்தனர். கணேசன் என்ற மருத்துவர், நித்யானந்தா ஆசிரமத்திற்கு நிலம் வழங்கியிருந்த நிலையில், நித்யானந்தா மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்ததால், நீதிமன்றத்தை நாடி மீண்டும் நிலங்களை பெற்றார். இதற்கிடையே, மருத்துவர் கணேசன், பவர் ஏஜெண்டாக நியமித்திருந்த சந்திரன் என்பவருக்கும் ஆசிரம நிர்வாகிகளுக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டதை அடுத்து, வருவாய்த் துறை மூலம் ஆசிரமத்தில் தங்கி இருப்பவர்களை வெளியேற்ற கணேசன் நடவடிக்கை எடுத்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்