இனி பள்ளி.. நட்பு? பசுமை நினைவுகளை நீலத்தில் பதித்து செல்லும் 12 மாணவர்கள்
தஞ்சாவூர் மாவட்டத்தில் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்கள் இறுதி தேர்வு முடிந்ததும் நண்பர்களுக்கு பிரியாவிடை அளித்துச் சென்றனர். தமிழகம் முழுவதும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு கடைசி தேர்வு நடைபெற்று முடிந்துள்ளது. இந்த நிலையில் தஞ்சாவூரை சேர்ந்த அரசு பள்ளி மாணவர்கள் அனைவரும் தேர்வுகள் எழுதி வெளியே வரும் போது, ஒருவருக்கொருவர் பேனா மையை சட்டையில் தெளித்து மகிழ்ந்தனர். மேலும், பள்ளி வாழ்க்கை முடிந்து மீண்டும் கல்லூரி வாழ்க்கையில் நுழையவுள்ள நிலையில், நண்பர்களை பிரிய மனமில்லாமல் பிரிந்து சென்றனர்.