தமிழகம் முழுவதும் ஓடும் பேருந்துகளில் பயணம் செய்யும் வயதான பெண்களை குறிவைத்து, மயக்க மருந்து கொடுத்து நகைப்பறித்த கள்ளக்காதல் ஜோடியை போலீசார் கைது செய்துள்ளனர். அடுத்தடுத்து வந்த புகார்களின் அடிப்படையில், நாமக்கல் மாவட்டம் காளப்பநாயக்கன்பட்டியை சேர்ந்த ராணி மற்றும் அவரது ஆண் நண்பர் பரமேஸ்வரன் ஆகியோரை கைது செய்து அவர்களிடமிருந்து 10 சவரன் நகைகள் மற்றும் தங்க காயின்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.