சென்னையில் உடல்நலக்குறைவால் காலமான பிரபல கராத்தே வீரர் ஷிஹான் ஹூசைனியின் உடல், அவரது சொந்த ஊரான மதுரைக்கு ஆம்புலன்ஸ் மூலமாக கொண்டு வரப்பட்டுள்ளது. பெரியார் பேருந்து நிலையம் அருகே சுண்ணாம்புக்கார தெரு பகுதியில் உள்ள அடக்கஸ்தலத்தில் மதியம் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது. ஷிஹான் ஹூசைனியின் உடலுக்கு பொதுமக்கள், மாணவர்கள் மற்றும் கராத்தே வீரர்கள் அஞ்சலி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.