"எங்களுக்கு மட்டும் கொடுக்கல" - போராட்டத்தில் குதித்த பொதுமக்கள்.. விழுப்புரத்தில் பரபரப்பு

Update: 2024-12-09 09:57 GMT

ஃபெஞ்சல் புயல் நிவாரண நிதி வழங்கக்கோரி, விழுப்புரம் - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நிலையில், நிவாரணம் பெறுவதற்கான டோக்கன் தங்கள் பகுதிக்கு இதுவரை வழங்கவில்லை என 9வது வார்டு பெண்கள் குற்றம் சாட்டினர். சாலை மறியல் போராட்டம் காரணமாக வாகனங்கள் நீண்டதூரத்திற்கு அணிவகுத்து நின்றன. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.

Tags:    

மேலும் செய்திகள்