தந்தி டி.வி. செய்தி எதிரொலி... - உடனே பாய்ந்த நடவடிக்கை.. | #Viluppuram | #ThanthiTV
குடியிருப்பு பகுதியை சூழ்ந்துள்ள வெள்ள நீரையும், கழிவு நீரையும் வெளியேற்ற கோரி பொது மக்கள் கொண்டமநாயக்கன்பட்டி மக்கள் போராட்டம் நடத்தினர். தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள கொண்டமநாயக்கன்பட்டி,அன்னை நகர் பகுதியில் 100 க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் சமீபத்தில் பெய்த கனமழை காரணமாக இவர்கள் வாழும் பகுதியில் மழை நீரும், கழிவு நீரும் சேர்ந்து தேங்கியுள்ளன. மழை நீரை வெளியேற்ற ஊராட்சி நிர்வாகத்தினர் நடவடிக்கை எடுக்காத நிலையில், இப்பகுதி மக்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். குடியிருப்புகளை சூழ்ந்துள்ள தண்ணீரை அகற்றி இனிவரும் நாட்களில் தண்ணீர் தேங்காதவாறு கால்வாய் வசதி செய்து தர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.