மதுரையில் GST வரியை குறைப்பதற்காக 3.5 லட்சம் லஞ்சம் பெற்ற GST துணை ஆணையர் மற்றும் 2 சூப்பிரண்டுகள் ஆகிய 3 பேரை, சிபிஐ அதிகாரிகள் கையும் களவுமாக கைது செய்தனர். ஜி எஸ் டி வரி பாக்கியில் குறிப்பிட்ட தொகையை குறைப்பதற்கு லஞ்சம் கேட்ட கண்காணிப்பாளர்கள் அசோக் குமார், ராஜ்பீர் ராணா ஆகியோரிடம் கார்த்திக் என்ற தொழிலதிபர் வழங்கும்
போது இருவரும் பிடிபட்டனர். விசாரணையில் இந்த தொகையை துணை கமிஷனர் சரவணகுமாருக்காக வாங்க சொன்னது தெரிய வந்தது. இதை தொடர்ந்து மூன்று பேரும் மதுரை சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
இதையடுத்து, துணை கமிஷனர் சரவணகுமார் உள்ளிட்டோரை டிசம்பர் 31ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க மதுரை மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் உள்ள மதுரை சிபிஐ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.