மாயமான தூத்துக்குடி சிறுமி - காரைக்காலில் மீட்ட போலீசார்.. | Karaikkal | ThanthiTV

Update: 2024-12-18 17:09 GMT

காரைக்கால் ரயில்நிலையத்தில் சந்தேகத்திற்கு இடமான முறையில் உறங்கிக் கொண்டிருந்த சிறுமியிடம் ரோந்து போலீசார் விசாரித்துள்ளனர். போலீஸை பார்த்த பயந்த சிறுமி, பதில் சொல்லாமல் அழுதுள்ளார். சிறுமியை மகளிர் காவல்நிலையத்திற்கு அழைத்து வந்து போலீசார் விசாரித்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டம் அரசூர் பூச்சிக்காடு கிராமத்தை சேர்ந்த முருகனின் மகள் என்பதும் பெற்றோர் திட்டியதால் கடந்த நவம்பர் மாதம் 4ஆம் தேதி வீட்டை விட்டு வெளியேறி ரயில் மூலமாக பல்வேறு இடங்களுக்கு சென்று காரைக்காலுக்கு வந்ததும் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து சிறுமிக்கு தகுந்த அறிவுரை வழங்கிய போலீசார், பெற்றோரை வரவழைத்து சிறுமியை ஒப்படைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்