உள்ளே புகுந்த மழை நீர்... மிதக்கும் ஶ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில்... பக்தர்கள் அவதி

Update: 2024-12-18 17:19 GMT

விருதுநகர் மாவட்டம் ஶ்ரீவில்லிபுத்தூரில், கனமழையால் ஆண்டாள் கோயில் கல் மண்டபத்தில் மழைநீர் தேங்கியது.

ஶ்ரீவில்லிபுத்தூரில் நேற்றிரவு கனமழை பெய்தது. இதனால் ஆண்டாள் கோயில் பெரிய பெருமாள் சந்நிதி, கல் மண்டபத்தில் தேங்கிய மழைநீர் காலை வரை வடியாததால் பக்தர்கள் சிரமத்திற்கு ஆளாகினர். பெரிய கோபுரம் எதிரே உள்ள கழிவுநீர் கால்வாய் அடைப்பு காரணமாகவே கோயிக்குள் மழைநீர் தேங்கியதாக தெரிவித்துள்ள பக்தர்கள், நகராட்சி நிர்வாகம் கழிவுநீர் கால்வாயை தூர்வார நடவடிக்கை எடுக்கவில்லை என்று தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்