``நான் ஒரு காதலியை பிரிவது போல்..'' - வைரலாகும் வைரமுத்து போட்ட ட்வீட்

Update: 2024-11-09 10:26 GMT

நடிகர் ரஜினிகாந்த்துடன் அரசியல், சினிமா குறித்து கலந்துரையாடி மகிழ்ந்ததை கவிஞர் வைரமுத்து தனது எக்ஸ் தள பக்கத்தில் நெகிழ்ச்சியோடு பகிர்ந்துள்ளார். அதில், இருவரும் 80 நிமிடங்கள் உரையாடியதாகவும், ஒரே ஒரு கிரீன் டீயைத் தவிர எந்த இடைஞ்சலும் இல்லை... இடைவெளியும் இல்லை எனவும் தெரிவித்த வைரமுத்து சினிமாவின் அரசியல், அரசியலின் சினிமா, வாழ்வியல் - சமூகவியல், கூட்டணிக் கணக்குகள், தலைவர்கள், தனிநபர்கள் என்று எல்லாத் தலைப்புகளிலும் தாங்கள் உரையாடியதாக குறிப்பிட்டார்... இவை அனைத்திலும் ரஜினிக்கு தெளிவு உள்ளது என்றும், தன்முடிவின் மீது உரசிப் பார்த்து உண்மை காணும் குணம் இருக்கிறது எனவும் புகழாரம் சூட்டினார். மேலும் உரையாடல் முடிந்த பின்பு ஒரு காதலியைப் பிரிவது போல் விடை கொடுத்து வந்ததாக நெகிழ்ச்சி தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்