உயிருக்கு பயந்து பயந்து செல்லும் மக்கள் - கொஞ்சம் மிஸ் ஆனாலும் அவ்ளோதான்

Update: 2024-12-23 06:36 GMT

அறந்தாங்கி அருகே மண் சாலை அடித்துச் செல்லப்பட்டு, அறுவடைக்கு தயாரான நெற்பயிர்களை கரையில் சேர்க்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் தாலுகாவிற்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களுக்கு முன்பாக கனமழை பெய்தது. 10 க்கும் மேற்பட்ட கண்மாய்கள் நிரம்பிய நிலையில், வடவாத்தி வடக்கு பகுதிக்கு செல்லக்கூடிய மண் சாலையில் உடைப்பு ஏற்பட்டது. இதன் காரணமாக, சாகுபடி செய்யப்படவுள்ள நெல்லை கரைக்கு கொண்டு செல்லமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், பள்ளி கல்லூரிகளுக்கு செல்லும் மாணவர்கள் மண் சாலை உடைப்பு காரணமாக பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். நெற்பயிர்களை கரை சேர்க்க உடனடியாக இப்பகுதியில் பாலம் அமைத்து தர வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்