``உன்ன தலைவரா போட்டதுக்கு இதுவும் வேணும் இன்னமும் வேணும்'' -உயிரை கையில் பிடித்து வந்த ஊராட்சி தலைவி
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே
பெண் ஊராட்சி மன்ற தலைவருக்கு கொலை மிரட்டல் விடுக்கப்படுவதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருபுவனம் அருகே உள்ள முதுவன்திடல் கிராமத்தில் பட்டியலின சமூகத்தை சேர்ந்த
கௌரி மகாராஜன் என்பவர் ஊராட்சி மன்ற தலைவராக உள்ளார். கடந்த 6 மாதங்களுக்கு முன்பு முதுவன்திடல் ஊராட்சியில் செயலாளராக பணியாற்றிய ராஜ்குமார் என்பவர் முறைகேடு புகார் தொடர்பாக
வேறு இடத்திற்கு பணி மாற்றம் செய்யப்பட்டார். இந்நிலையில் அவரது உறவினரும் திருப்புவனம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் உதவி இயக்குனராக பணி புரிந்து வரும் கேசவதாசன் என்பவர் முன்விரோதம் காரணமாக தன்னை தரக்குறைவாக பேசுவதாகவும் , ராஜ்குமாரின் உறவினர்கள் கொலை மிரட்டல் விடுப்பதாகவும் முதுவன்திடல் ஊராட்சி மன்ற தலைவர் கௌரி மகாராஜன் புகார் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுகொண்டார்.