மீண்டும் தொற்றிய போர் பதற்றம்... உக்கிரமாக மோதிக்கொள்ளும் ரஷ்யா - உக்ரைன்

Update: 2025-03-21 12:22 GMT

மீண்டும் தொற்றிய போர் பதற்றம்... உக்கிரமாக மோதிக்கொள்ளும் ரஷ்யா - உக்ரைன்

ரஷ்யா, உக்ரைன் போர் நிறுத்த ஒப்பந்தம் அமலாவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், ரஷ்யாவும், உக்ரைனும் பரஸ்பரம் தாக்குதல் நடத்தியுள்ளன. ரஷ்யாவின் மேற்குப் பகுதியான கர்ஸ்க்-ல் Kursk எரிவாயு நிலையத்தை குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதலில் தீப்பற்றி எரிந்தது.

இதேபோல், உக்ரைனின் மிகப்பெரிய அணுமின் நிலையமான சபோரிஷியா Zaporizhzhia பகுதியில் நடத்தப்பட்ட தாக்குதலில் கட்டிடத்தில் தீப்பிடித்து, குழந்தை உட்பட 5 பேர் காயமடைந்தனர்.

இந்நிலையில், 200க்கும் மேற்பட்ட உக்ரைனிய ட்ரோன்களை சுட்டுவீழ்த்தியதாக ரஷ்யாவும், கடந்த 24 மணி நேரத்தில் ரஷ்ய ராணுவ விமானதளம் மீது தாக்குதல் நடத்தியதாக உக்ரைன் தரப்பும் தெரிவித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்