தமிழகத்தை மிரட்டப்போகும் அதி கனமழை..."மிக கவனம் தேவை..." - வார்னிங் விடுத்த வானிலை மையம்

Update: 2024-05-16 09:45 GMT

தமிழகத்தை மிரட்டப்போகும் அதி கனமழை..."மிக கவனம் தேவை..." - வார்னிங் விடுத்த வானிலை மையம்

நீலகிரி, கோவை உள்ளிட்ட 7 மாவட்டங்களில் இன்று அதி கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. மன்னார் வளைகுடா ஒட்டிய குமரிக்கடல் பகுதியில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று முதல் வருகிற 20ஆம் தேதி வரை தமிழகத்தின் அநேக இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.குறிப்பாக இன்றைய தினம் நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல்,தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி ஆகிய 7 மாவட்டங்களில் கன முதல் அதி கனமழை பெய்யும் என்றும் தூத்துக்குடி, விருதுநகர், மதுரை, திருப்பூர் மற்றும் ஈரோடு ஆகிய 5 மாவட்டங்களில் கன முதல் மிக கனமழை பெய்யும் என்றும் கணித்துள்ளது. ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, திருச்சி உள்ளிட்ட 15 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்