"பேருந்தில் இந்த பொருட்களை எடுத்து கொண்டு வர கூடாது.." போக்குவரத்து கழகம் கடும் எச்சரிக்கை

Update: 2024-12-09 12:25 GMT

மலை மாவட்டமான நீலகிரியின் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் விதமாக பிளாஸ்டிக் தடையை முறையாக கண்காணிக்குமாறு சமீபத்தில் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி, கார், பஸ் உள்ளிட்ட வாகனங்களில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் குடிநீர் பாட்டில்களை கொண்டு வருபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இருப்பினும், சமீபகாலமாக அரசு பேருந்துகளில் வரும் பயணிகள் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை எடுத்து வருவதாக புகார் எழுந்தது. இதனை அடுத்து அரசு பேருந்துகளில் வருவோர் தடை செய்யப்பட்ட குடிநீர், குளிர்பான பாட்டில்கள், கேரி பேக்குகள் உள்ளிட்ட பிளாஸ்டிக் பொருட்களை கொண்டு வர கூடாது என உதகை மண்டல போக்குவரத்து கழகம் உத்தரவிட்டுள்ளது. இதனை அரசு பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்கள் கட்டாயமாக சோதனை செய்ய வேண்டும் என்றும், இல்லாவிட்டால் நடத்துனர் மற்றும் ஓட்டுநர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் போக்குவரத்து கழகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்