தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பு - யார் யாருக்கு?

Update: 2025-01-05 07:52 GMT

திருவள்ளுவர் திருநாளன்று வழங்கப்படவுள்ள தமிழக அரசின் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. 2025ஆம் ஆண்டுக்கான திருவள்ளுவர் விருது புலவர் மு.படிக்கராமுவுக்கும், பேரறிஞர் அண்ணா விருது முன்னாள் எம்பி, எல்.கணேசனுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது. மகாகவி பாரதியார் விருதை பாடலாசிரியர் கபிலனும் பாவேந்தர் பாரதிதாசன் விருதை கவிஞர் பொன். செல்வகணபதியும், தமிழ்த் தென்றல் திரு.வி.க. விருதை மருத்துவர் ரவீந்திரநாத்தும் பெறுகின்றனர். முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம் விருது வே.மு.பொதியவெற்பனுக்கும், தந்தை பெரியார் விருது விடுதலை ராஜேந்திரனுக்கும் வழங்கப்படுகிறது. அண்ணல் அம்பேத்கர் விருதை விசிக எம்.பி. ரவிக்குமாரும், முத்தமிழறிஞர் கலைஞர் விருதை முத்து வாவாசியும் பெறுகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்