சென்னை தலைமைச் செயலகம் அருகே, ஆட்டோவில் கடத்தி செல்லப்பட்ட நட்சத்திர ஆமைகளை பறிமுதல் செய்த போலீசார், அவற்றை வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். ஆட்டோ ஓட்டுநரிடம் விசாரித்ததில், அடையாளம் தெரியாத சிலர் ஜாம்பஜாரில் மூட்டைகளை ஏற்றி விட்டதாகவும், அவற்றை காசிமேடு பகுதிக்கு கொண்டு செல்வதாகவும் கூறியுள்ளார்.