லாரி மோதி தூக்கி வீசப்பட்டு பலியான கல்லூரி மாணவர்.. திருவள்ளூரில் அதிர்ச்சி சம்பவம் | Tiruvallur
திருவள்ளூர் அருகே நடந்த சாலை விபத்தில் கல்லூரி மாணவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் ராமதண்டலம் அருகே, இருசக்கர வாகனம் மீது லாரி மோதி விபத்துக்குள்ளானது. இதில் இருசக்கர வாகனத்தை ஓட்டிச் சென்ற சந்தோஷ் என்ற கல்லூரி மாணவர், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயம் அடைந்த சந்தோஷின் தாயார், அரசு மருத்துவக் கல்லூரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.