தாத்தாவிற்கு 101வது பிறந்தநாள் - கொண்டாடி மகிழ்ந்த குடும்பத்தினர்

Update: 2024-11-20 13:34 GMT
  • ஐந்து தலைமுறைகள் கண்ட 101-வயது முதியவருக்கு பிறந்தநாள் கொண்டாடி கொள்ளு பேரன்கள் மகிழ்ந்தனர்.
  • திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பகுதியைச் சேர்ந்த கோவிந்தராஜ், நகராட்சி உதவியாளராக பணியாற்றி ஓய்வு பெற்றார். இவரது மனைவி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்த நிலையில், இளைய மகனுடன் வசித்து வருகிறார். 101 வயது ஆனாலும், தன்னுடைய அன்றாட பணிகளை யார் உதவியுமின்றி தானே செய்து கொண்டு உற்சாகமாக பொழுதை போக்கி வருகிறார். அவரது பிறந்தநாளையொட்டி, மகன், பேரன், பேத்தி, கொள்ளு பேரன் என ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 56 பேர் ஒன்றிணைந்து கோவிந்தராஜ்க்கு பிறந்தநாள் கொண்டாடி மகிழ்ந்தனர்.
Tags:    

மேலும் செய்திகள்