தொடர் விடுமுறை எதிரொலி..தஞ்சை பெரிய கோயிலில் குவியும் ஐயப்ப பக்தர்கள் | Tanjore
உலகப்புகழ் பெற்ற தஞ்சை பெரிய கோயிலின் எழில்மிகு அழகைக் காணவும், பெருவுடையாரை தரிசனம் செய்யவும், சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் குவிந்துள்ளனர். தொடர் விடுமுறையால் ஏராளமான சுற்றுலா பயணிகள் மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் வருகை தந்துள்ளனர். சுவாமி தரிசனம் செய்தபின், கோயில் பிரகாரத்தை வலம் வந்து ஒவ்வொரு இடத்திலும் நின்று செல்ஃபி மற்றும் குழு புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.