கோரதாண்டவத்தை குறைத்த குற்றாலம்..இன்று அப்படியே மாறிய காட்சி..இதை பார்த்தால் நீங்களே ஷாக் ஆகிருவீங்க

Update: 2024-12-25 13:34 GMT

தென்காசி மாவட்டம் குற்றால அருவிகளில், சுற்றுலா பயணிகள் மற்றும் ஐயப்ப பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளது. கிறிஸ்துமஸ் பண்டிகை மற்றும் விடுமுறை தினம் என்பதால் காலை முதலே பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் மற்றும் ஐயப்ப பக்தர்கள் வருகை அதிகரித்து காணப்பட்டது. குற்றால அருவியில் அனைத்து பகுதிகளிலும் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டதால் ஏராளமானோர் குளித்துச் சென்றனர். குற்றாலம் மெயின் அருவி முழுவதும் ஐயப்ப பக்தர்களின் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. காட்டாற்று வெள்ளப்பெருக்கினை தொடர்ந்து ஏற்பட்ட சேதங்கள் சரிசெய்யப்படும் பணிகள் நடைபெற்று வருவதால், பழைய குற்றால அருவியில் 14வது நாளாக குளிப்பதற்கு தடை தொடர்கிறது.

Tags:    

மேலும் செய்திகள்