விஸ்வரூபஆஞ்சநேயருக்கு... விசேஷமாக தயாராகும் 1,00,008 வடைகள் - களைகட்டும் அனுமன் ஜெயந்தி
மார்கழி திங்கள் அமாவாசையான வரும் டிசம்பர் 30ஆம் தேதி அனுமன் ஜெயந்தி விழா இந்த ஆண்டு கொண்டாடப்பட உள்ளது. இதை முன்னிட்டு, நாமக்கல் நகரில் உள்ள 18 அடி உயர விஷ்வரூப ஆஞ்சநேயர் சுவாமிக்கு அன்றைய தினம் ஒரு லட்சத்தை 8 வட மாலை சாத்தப்பட உள்ளது. அதன்படி இந்த வடைகள் தயாரிக்கும் பணி கோயில் வளாகத்தில் உள்ள மண்டபத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஸ்ரீரங்கம் பகுதியை சேர்ந்த 35 பேர் இந்த பணியில் ஈடுபட்டுள்ளனர்.