"மழை பேஞ்சாலே முட்டி அளவு தண்ணி நிக்குது" தீவாக மாறிய ஏரியா..பொதுமக்கள் வேதனை பேட்டி
பரமக்குடி அருகே குடியிருப்புகளை சூழ்ந்த கண்மாய் உபரிநீர், 10 நாட்களை கடந்தும் வடியாததால் அப்பகுதி மக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். கடந்த மாதம், காட்டு பரமக்குடி கண்மாய் நிரம்பி, அதனருகே உள்ள ஆண்டாள் நகரை உபரி நீர் சூழ்ந்தது. தற்போது வரை தண்ணீர் சூழ்ந்துள்ளதால், வீடுகளை விட்டு வெளியே வர முடியாத சூழல் உள்ளதாக கூறிய பொதுமக்கள், பல முறை மனு அளித்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றம்சாட்டினர். இந்நிலையில், பிரச்சினைக்கு உரிய தீர்வு காணாவிட்டால், போராட்டத்தில் ஈடுபடுவோம் என அப்பகுதி மக்கள் எச்சரித்துள்ளனர்.